உருவானது மோக்கா புயல்... நாளை கரையை கடக்கும்... 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

 
புயல்

தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி புயல் சின்னமாக வலுப்பெற்ற நிலையில், மோக்கா புயல் உருவானதையடுத்து தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.

அசானி புயல்

அந்த வகையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர், புதுச்சேரி, காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மே 11ம் தேதி நிலவக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதன் பிறகு மோக்கா புயல், வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   

மாண்டஸ் புயல்

நாளை மே 12ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் புயல் கடக்கும் 12ம் தேதி தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web