விநோதமான பாதிப்பு... வருஷத்துல 300 நாட்கள் தூங்கிக் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்!

 
தூக்கம் கும்பகர்ணன்

உலகம் முழுவதுமே விதவிதமான விநோதமான நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி பலர் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்க, வருடத்தில் 90 சதவீத நாட்களை தூக்கத்தில் கழிப்பதால் அவதியுற்று வருகிறார் இந்திய இளைஞர் ஒருவர்.

ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் வசித்து வரும் புர்காராம் (42) என்பவர், தனது அசாதாரண தூக்கப் பழக்கத்தால் சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியுள்ளார்.

ஆக்ஸிஸ் ஹைப்பர்சோம்னியா எனும் அரிய தூக்கக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் புர்காராம், வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்கள் வரை தூங்கிக் கொண்டே இருக்கிறார். சில சமயங்களில் 25 நாட்களுக்கு மேல் எழாமல் மயக்க நிலையிலேயே இருந்து வருகிறார்.  இவரது நிலை முதலில் ஒரு நாளைக்கு 15 மணி நேர தூக்கமாக மட்டுமே இருந்தது.

ஆனால் இப்போது வாரக் கணக்கில் நீடிக்கிறது. இவரது கிராம மக்கள் இவரை ராமாயணத்தின் கும்பகர்ணனுடன் ஒப்பிட்டு “உண்மையான கும்பகர்ணன்” என அழைக்கத் தொடங்கியுள்ளனர். பல ஆண்டு சிகிச்சைகளுக்குப் பிறகும், புர்காராம் தீவிர சோர்வு மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வருகிறார். இவர் தனது மளிகைக் கடையை மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே நடத்தி வருகிறார்.  

மனித மூளை

சில நேரங்களில் பணியிடத்திலேயே அப்படியே தூங்கி விடுகிறார். இவரது மனைவி லிச்மி தேவி மற்றும் தாயார் கன்வாரி தேவி ஆகியோர் இவரை உணவு ஊட்டி, குளிப்பாட்டி, முழுமையாக பராமரித்து  வருகின்றனர். இவர் மீண்டு எல்லோரையும் போல் மிகச் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். ஆக்ஸிஸ் ஹைப்பர்சோம்னியா போன்ற அரிய தூக்கக் கோளாறுகள் உலக அளவில் மிகச் சிலரையே பாதிக்கின்றன.

இந்த நிலை மூளையில் உள்ள டி.என்.எஃப்-ஆல்ஃபா புரத அளவுகளின் ஏற்றத்தாழ்வால் ஏற்படுகிறது. இது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை சீர்குலைக்கிறது. மரபணு காரணிகள், நரம்பியல் கோளாறுகள் அல்லது நோயெதிர்ப்பு அமைப்பு ஏற்றத்தாழ்வு ஆகியவை இதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை

இந்தக் கோளாறு புர்காராமின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது.இதனால் சோர்வு, தலைவலி மற்றும் குறைந்த உற்பத்தித்திறன் ஏற்படுகிறது. விழிப்புணர்வை ஊக்குவிக்கும் மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பு ஆகியவை சிகிச்சையில் அடங்கும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?