காதலுக்கு கடும் எதிர்ப்பு.. விரக்தியில் ஏரியில் குதித்து காதல் ஜோடி தற்கொலை!

 
ஸ்ரீகாந்த் - அஞ்சனா

கர்நாடக மாநிலம் தலகட்டபுரா அருகே உள்ள அஞ்சனாபூரை சேர்ந்தவர் அஞ்சனா (20). இவர் பிபிஏ படித்து வந்தார். கோனானகுண்டே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (24) . இவர் பி.காம் படித்து வந்தார். அஞ்சனாவும், ஸ்ரீகாந்தும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். ஸ்ரீகாந்த் ஏற்கனவே திருமணமானவர். இவர்களின் காதலுக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதல் ஜோடி

இந்நிலையில், ஜூலை 1ம் தேதி அஞ்சனா தலைமறைவானார்.இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோணனகுண்டே, தலகதபுரா காவல்நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நைஸ் சாலை அருகே உள்ள ஏரியில் அஞ்சனாவும், ஸ்ரீகாந்தும் இன்று கயிற்றால் கைகள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.

தற்கொலை

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அஞ்சனா மற்றும் ஸ்ரீகாந்த் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இருவரும் சேர்ந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெற்கு பிரிவு டிசிபி லோகேஷ் ஜகலாசர் தெரிவித்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web