மசோதாவை நிறைவேற்றுவதற்கு கடும் எதிர்ப்பு.. நாடாளுமன்றத்தில் மோதிக் கொண்ட எம்.பிக்கள்!

 
ஜார்ஜியா நாடாளுமன்ற

ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, எம்.பி.க்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்ஜியா நாட்டில் பெரும் சர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள வெளிநாட்டு முகவர்கள் மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் சட்டம் என விமர்சிக்கப்பட்டுள்ள மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது.

சோவியத் யூனியனில் இருந்த ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடான ஜார்ஜியா, அந்நாட்டின் ஆளும் கட்சியான ஜார்ஜியன் டிரீம் பார்ட்டி ஒரு வருடத்திற்கும் மேலாக வெளிநாட்டு முகவர்கள் மசோதாவை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. ஜார்ஜியாவின் ஆளும் கட்சி, வெளிநாட்டு நிதியுதவி பெறும் ஊடகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், ரஷ்யாவைப் போலவே, ஜனநாயகத்தின் குரலை அடக்கவும், மனித உரிமை அமைப்புகளை குறிவைத்தும் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web