மாணவன் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; ரூ.2 கோடிக்கான சொத்துக்களை எழுதி வாங்கியதால் இளம்பெண் ஆத்திரம்!

மதுரையில் ரூ. 2 கோடி கேட்டு பள்ளி மாணவனைக் கடத்திச் சென்ற வழக்கில் திடீர் திருப்பமாக, இளம்பெண் ஒருவர் கூலிப்படையை ஏவி, மாணவனைக் கடத்தியது தெரிய வந்துள்ளது.
கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மாணவனையும், ஆட்டோ ஓட்டுநரையும் சேர்த்து கடத்திச் சென்ற போது அவர்களது செல்போனில் இளம்பெண் ஒருவர் பேசியதும், போலீசார் அவர்களைப் பின் தொடர்வதையும் பார்த்து பாதியில் மாணவனையும், ஆட்டோ ஓட்டுநரையும் இறங்கி விட்டு தப்பியோடினார்கள். இந்நிலையில், கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடித்து கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இந்த தகவல்கள் வெளீயாகி உள்ளன.
மதுரை எஸ்எஸ்.காலனி விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. இவரது கணவர் உயிரிழந்து விட்ட நிலையில், இவரது 14 வயது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல் ஆட்டோவில் வீட்டிலிருந்து பள்ளிக்கு நேற்று முன்தினம் சென்ற மாணவரை நடுவழியே ஆம்னி வேனில் வந்த 4 பேர், ஆட்டோவை வழிமறித்து, ஓட்டுநருடன் மாணவனையும் கடத்தி சென்றனர்.
அதன்பின்னர், ஆட்டோ ஓட்டுநரின் செல்போனில் ராஜலட்சுமிக்கு போன் செய்து, ரூ.2 கோடி பணத்துடன் குறிப்பிட்ட இடத்திற்கு வரவேண்டும் எனவும் இல்லையெனில் மாணவரை கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து பதற்றமடைந்த மாணவனின் தாயார், எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு தனது மகன் கடத்தப்பட்ட விவரம் குறித்தும், தன்னிடம் ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டல் தொலைபேசி வந்தது குறித்தும் தகவல் தெரிவித்தார். காவல் ஆய்வாளர் காசி தலைமையில் போலீசார் உடனடியாக தீவிர விசாரணையில், ஆய்விலும் ஈடுபட்டு மாணவன் இருக்குமிடத்தை நெருங்கினர்.
போலீசார் தங்களைச் சுற்றி வளைப்பதைத் தெரிந்துக் கொண்ட கடத்தல் கும்பல், மதுரை செக்கானூரணி அருகே கிண்ணிமங்கலம் என்ற பகுதியில் மாணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை இறக்கி விட்டு தப்பினர். அங்கு சென்ற போலீஸார் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இது தொடர்பாக ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தென்காசியை சேர்ந்த வீரமணி, காளிராஜ், நெல்லையை சேர்ந்த அப்துல் காதர் ஆகிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில், ராஜலட்சுமியின் கணவர் பணிபுரிந்த வங்கியில், ரூ.2 கோடி கடன் வாங்கியிருந்த பெண்மணி, கடனை அடைக்காமல் இருக்கவே அவரது சொத்துக்களை வங்கி கடனுக்காக எழுதி வாங்கி இருக்கிறார் ராஜலட்சுமியின் கணவர். அந்த கடன் தொகையும் தொழிலில் நஷ்டமடைந்ததால் கரைந்து போனதில், எப்படியாவது ரூ.2 கோடியை மீட்க வேண்டும் என்று மாணவனைக் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டியது தெரிய வந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!