மாணவி வன்கொடுமை... சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை.. இன்று பிற்பகல் விளக்கமளிக்க உத்தரவு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கல்லூரியில் படித்து என்ஜினீயரிங் படித்து வந்த மாணவி ஒருவர், பல்கலை வளாகத்திலேயே வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விரைவில் அதிகபட்ச தண்டனையை வாங்கி தருவதற்காக போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதற்காக, தனி படை ஒன்று அமைக்கப்பட்டு தீவிரமாக செயலில் இறங்கி உள்ளது.
இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததுள்ளது. பெண் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் அளித்த கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 2.15 மணிக்கு இந்த வழக்கு தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் தரப்பில் விளக்கம் அளிக்க நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!