பேருந்தில் மாணவிக்கு திடீரென நெஞ்சுவலி.. துரித நடவடிக்கையால் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!

 
மங்களூரு மாணவி

மங்களூருவில் கல்லூரியிலிருந்து தனியார் பேருந்தில் வந்து கொண்டிருந்த மாணவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் ஆறு நிமிடத்தில் பேருந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மாணவியின் உயிரைக் காப்பாற்றினர். கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் உள்ள மங்களதேவி - குஞ்சதாபில் இடையே 'கிருஷ்ண பிரசாத்' என்ற பெயரில் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு, இவ்வழியாக பஸ் சென்று கொண்டிருந்தது.

வழியில் உள்ள காரிடாரில் கல்லூரி முடிந்து 15 கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறினர். பஸ்சில் ஏறிய சிறிது நேரத்தில் ஒரு மாணவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வலியில் துடிப்பதைக் கண்டு நண்பர்கள் பதற்றமடைந்தனர். கண்டக்டர் மகேஷ் பூஜாரி சுரேஷ் டிரைவர் கஜேந்திர குந்தருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் பேருந்தை ஹாரன் அடித்து ஆறு நிமிடத்தில் அதிவேகமாக 6 கி.மீ தொலைவில் உள்ள ஃபாதர் முல்லர் மருத்துவமனைக்கு பேருந்தை ஓட்டிச் சென்றார். நேராக மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து வாசலில் பேருந்தை நிறுத்தினார்.

ஸ்ட்ரெச்சருக்காக காத்திருக்காமல், பஸ் கண்டக்டர், மருத்துவமனை பாதுகாவலர்கள், பெண்ணை   தூக்கிக்கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்று, உடனடியாக சிகிச்சை அளித்தனர். உரிய நேரத்தில் மாணவி அழைத்து வரப்பட்டதால்,  உயிர் தப்பினார். மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியின் உயிரைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் செயலை பயணிகளும் பொதுமக்களும் பாராட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பாராட்டுகளை பெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web