பல்கலைக் கழக வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி... பெரும் பரபரப்பு!

 
மேற்கு வங்கம்


 
மேற்கு வங்க மாநிலத்தில்   ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டு படித்து வந்த  இளங்கலை மாணவி வியாழக்கிழமை இரவு மயக்க நிலையில் கல்லூரி வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டார்.இந்த மாணவியை அவரது நண்பர்கள் மற்றும் பிற பல்கலைக்கழக ஊழியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.


மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறிவிட்டனர்.  இந்த பெண் மாலையில் அவர் தனது வகுப்பு தோழர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்ததாக மற்றொரு பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் பார்த்ததாக வாக்குமூலம் அளித்தார்.    

மேலும் மாணவியின் பெயரையும் பல்கலைக்கழக அதிகாரிகள் வெளியிடவில்லை. வளாகத்தில் உள்ள நீர்நிலையின் ஓரத்தில் மயக்க நிலையில் மாணவி மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இச்சம்பவம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?