பள்ளியில் சேர்ந்த 2 வது நாளே டி.சி வாங்கிய மாணவி.. பகீர் பின்னணி!

 
 மாணவி

பூம்புகார் சாலையில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த 14 வயது மாணவியை, மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முதல் நாளாக மாணவி பள்ளிக்கு சென்றார். பின்னர், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, ​​ஒரு ஆசிரியர் வகுப்பை கூட்டுமாறு கூறியுள்ளார். அப்போது, ​​வெளியில் வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாகவும், வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் மாணவி கூறியதால், ஆசிரியர் மாணவியின் கன்னத்தில் அறைந்ததாக மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து இன்று மாணவியுடன் பள்ளிக்கு வந்த பெற்றோர், படிக்க வந்த மகளை எப்படி  வேலை வாங்குவீர்கள் என பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவியை வேறு பள்ளியில் சேர்த்து விடுவதாக கூறி மாணவியின் டிசியை வாங்கி சென்றனர். ஒழுக்கம் என்ற பெயரில் பள்ளி நிர்வாகம் மாணவிகளை கொடுமைப்படுத்துவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறியதாவது: பள்ளியில் நேற்று மதியம் 3.30 மணி முதல் ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடந்ததால், ஆசிரியர்கள் யாரும் வகுப்பறைக்கு செல்லவில்லை, மாணவியை யாரும் அடிக்கவில்லை. மேலும் பள்ளியில் உள்ள வகுப்பறைகளை மாணவர்கள் தினமும்  சுத்தம் செய்வது வழக்கம் என்றும் தெரிவித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web