நீட் தேர்வில் தோல்வி... மாணவி தூக்கிட்டு தற்கொலை... கதறும் பெற்றோர்!

 
நீட்
 

சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் ஸ்ரீவாரியார் நகரில் வசித்து வருபவர்  ஹரிஷ்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி ஜீவரேகா. இவர்களுக்கு 2 மகள்கள். 

ஆம்புலன்ஸ்

இதில் மூத்த மகள் வெளிநாட்டில் 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். 2 வது மகள் 17 வயது மதனஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு  படித்து முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் மதனஸ்ரீ தோல்வியடைந்ததாக தெரிகிறது.  

உத்தரபிரதேச போலீஸ்

இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முதல் மாடியில் உள்ள தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும்  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மதனஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?