தாயின் சேலையில் தூக்கில் தொங்கிய மாணவி சஞ்சனா... தற்கொலை கிடையாது என பெற்றோர் புகார்!

 
கொலை

தாயின் சேலையால் தூக்கிட்டவாறு பள்ளி மாணவி சஞ்சனா மர்மமான முறையில் இறந்த கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தங்கள் மகள் தற்கொலை செய்யவில்லை என்று அவரது பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹலவுத்ராவின் லம்பானிஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் உமைநாயகி. இவரது மகன் சஞ்சனா(14). இவர் ஹட்டி அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயின் சேலையில் சஞ்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கடைக்கு வெளியே சென்றிருந்த சஞ்சனாவின் பெற்றோர் வீடு திரும்பிய போது தங்கள் மகள் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பரமசாகர் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஞ்சனா உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது தங்கள் மகள் தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை இல்லை என்று சஞ்சனாவின் பெற்றோர் தெரிவித்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

இந்த சம்பம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சஞ்சனாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சிரிகெரே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சஞ்சனா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அதற்கு யாராவது தூண்டினார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மமான முறையில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சித்ரதுர்கா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web