மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர்.. மருத்துவரை பிடித்து தர்ம அடி கொடுத்த உறவினர்கள்!

கேரளாவில் உள்ள கண்ணூர் எலையாவூரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (32). இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பள்ளி மாணவிக்கு இவர் அடிக்கடி ஆபாச வீடியோக்களை அனுப்பினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார்.
அவர்கள் அலெக்ஸை கையும் களவுமாக பிடிக்க விரும்பினர். அதன்படி மாணவி அலெக்ஸிடம் பணிவாக பேசி கோழிக்கோடு வரவழைத்தார். இதனால் அலெக்ஸ், மாணவியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மாணவி சொன்ன இடத்திற்கு காரில் வந்துள்ளார். இதையடுத்து, மாணவியை காரில் அழைத்துச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, மறைந்திருந்த மாணவியின் உறவினர்கள், அலெக்ஸை பிடித்து சரமாரியாக அடித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அலெக்ஸை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!