நடிகர் நெப்போலியனுக்கு சொந்தமான மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை!

 
சிறுமிக்கு பாலியல் சீண்டல்

விருதுநகர் மாவட்டத்தில் பிரபல நடிகர் நெப்போலியனுக்கு சொந்தமான மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மருத்துவரைக் கைது செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பிசியோதெரபி பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கல்லூரி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பிசியோதெரபி படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. 

இதையடுத்து சுமார் 28 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் அடங்கிய குழுவினர் கல்லூரி முதல்வர் தலைமையில் கடந்த செம்படம் 1ம் தேதி நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பிரபல நடிகருக்கு சொந்தமான மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். அவர்கள் 3 நாட்கள் தங்கியிருந்து பயிற்சி முகாமில் பங்கேற்ற நிலையில் 7 மாணவிகளுக்கு மட்டும் நீச்சல் தொடர்பான கூடுதல் பிசியோதெரபி பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

மருத்துவர்

இவர்கள் வீரவநல்லூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தப்படி பயிற்சி பெற்று வந்தனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று அங்கு பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் டேனியல் என்பவர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். அப்போது கோவில்பட்டியை சேர்ந்த 18 வயதான மாணவிக்கு டேனியல் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சக மாணவிகளிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அந்த மாணவி தனது பெற்றோரிடமும் இது குறித்து சொல்லவே, அவர்கள் வீரவநல்லூர் விரைந்து சென்றனர். தொடர்ந்து வீரவநல்லூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பந்த இடத்திற்கு சென்ற போலீசார் டேனியலைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

போலி டாக்டர்

பிரபல நடிகருக்கு சொந்தமான மருத்துவமனையில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த இந்த மருத்துவர், அடிக்கடி மதுபோதையில் பணிக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட போதும் அவர் மதுபோதையில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நடிகர் நெப்போலியன் தனது மகன் தனுஷ் சிறு வயதில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லுாரில் செயல்பட்ட மயோபதி மையத்திற்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற நிலையில், பின்னர் தன் ஜீவன் பவுண்டேஷன் மூலம், அங்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?