பள்ளி வேன் ரயில் மீது மோதி மாணவர்கள் பலி... அதிர்ச்சி அடைந்தேன்... செல்வப்பெருந்தகை கண்டனம்!

 
செல்வப்பெருந்தகை

 கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றபோது, அந்த வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரெயில் பள்ளி வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது.

கடலூர்

இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். பள்ளி மாணவ மாணவிகள் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். Also Read மதுக்கூர் அருகே கல்யாணபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அதில், கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் பள்ளி குழந்தைகள் இருவர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பொதுமக்கள் தினமும் கடக்கும் ரெயில்வே வழிகளில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

கடலூர்

மக்கள் எங்கு அதிகம் செல்கிறார்களோ அந்த இடங்களில் பாதுகாப்பும், எச்சரிக்கையும் கட்டாயம் இருக்க வேண்டும். இத்தகைய துயரங்களுக்கு ரெயில்வே துறை முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மத்திய ரெயில்வே மந்திரி நேரடியாக இதனை கவனித்து, பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாப்பதுதான் ஒர் அரசின் முதல் கடமையாகும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சையும் பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?