பேய் பயத்தில் அலறிய மாணவர்கள்.. புரிய வைக்க ஆசிரியர் செய்த செயல்.. வீடியோ வைரல்!

 
ஆனந்த்பூர் பள்ளி ஆசிரியர்

பொதுவாக, சிறு வயது குழந்தைகள் பேய் என்ற பெயரைக் கேட்டாலே பயப்படுவார்கள். பிறகு வளர்ந்ததும் அப்படி இல்லை என கற்றுக்கொடுக்க தைரியமாக இருப்பார்கள். அப்படித்தான் மஹராஷ்டிராவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவர் பேய் இல்லை என்று சொல்லி தைரியம் கொடுத்துள்ளார்.

ஆதிலாபாத், ஜைனத் மண்டலில் உள்ள ஆனந்த்பூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து, காலி அறையில் இருந்து அலறல் சத்தம் வந்ததையடுத்து மாணவர்களிடையே பீதி ஏற்பட்டது. இதையறிந்த அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர், பேய் இல்லை என்றும், இரவு முழுவதும் அந்த அறையில் நான் தூங்குவதாகவும் கூறினார்.  அப்போது உங்களுக்கு பேய் பயமா போகுமா என கேட்டுவிட்டு ஒரு நாள் ஆசிரியர் அந்த அறையில் தூங்கி எழுந்தார்.

காலையில் பள்ளிக்குச் சென்றபோது, ​​ஆசிரியர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அந்த அறையில் பேய் நடமாட்டம் இல்லை என்று கூறி ஆசிரியரை எழுப்பினர். பேய் இல்லை என்று புரிய வைக்க ஆசிரியர் செய்த இந்த செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆசிரியையை பாராட்டி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web