சுபமுகூர்த்த தினம்... நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்!

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் முகூர்த்த நாட்களில் பொதுமக்களின் தேவை மற்றும் வேண்டுகோளுக்கிணங்க கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை ஜூன் 27ம் தேதி வெள்ளிக்கிழமை ஆனி மாதத்தில் சுபமுகூர்த்த தினத்தன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திரப் பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாள்களில் அதிகஅளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 27.06.2025 அன்று அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யும்படி பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் ஜூன் 27ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 12 தட்கல் முன்பதிவு வில்லைகள், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது