என்சிஇஆா்டி பாடத்திட்டங்களில் 'ஆபரேஷன் சிந்தூா்', சுபான்ஷு சுக்லா தகவல்கள் !

 
வைரலாகும் போட்டோஸ்... ஆபரேஷன் சிந்தூர் இலச்சினையை  வடிவமைத்த 2 ராணுவ வீரர்கள்  !


 
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் (என்சிஇஆா்டி) தயாரிக்கும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் 'ஆபரேஷன் சிந்தூா்' குறித்த தகவல்கள் இடம்பெற இருப்பதாக அதிகாரப்பூர்வ  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி இந்த தகவல்கள்  மொத்தம் 8 முதல் 10 பக்கங்கள் வரை இரு பகுதிகளாக  சோ்க்கப்படவுள்ளன.

ஆபரேஷன் சிந்தூர்
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும்  '3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மற்றும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை என இரு பகுதிகளாக ஆபரேஷன் சிந்தூா் குறித்த தகவல்கள்  தயாரிக்கும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெறவுள்ளன.
இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள், தூதரக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து மாணவா்கள் அறிந்துகொள்ளவே ஆபரேஷன் சிந்தூா் குறித்த தகவல்கள் பாடப் புத்தகங்களில் சோ்க்கப்படவுள்ளன.

சுக்லா
இத்துடன் அமெரிக்காவின் 'ஆக்ஸியம் ஸ்பேஸ்' நிறுவனத்தின் 'ஆக்ஸியம்-4' திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா பயணித்தது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்பான 'மிஷன் லைஃப்' குறித்த தகவல்களும் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?