சாட்டை துரைமுருகன் திடீர் கைது; அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!

 
சாட்டை துரைமுருகன்
 தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் நேற்று  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று காலை தென்காசி மாவட்டம் குற்றாலம் செல்வதற்காக சாட்டை துரைமுருகன் நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். 

சாட்டை துரைமுருகன்
முன்னதாக விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன், அக்கட்சியின் வேட்பாளர் அபிநயாவுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும், தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. 

சீமான்
இதில் அதிருப்தியடைந்த திமுக நிர்வாகிகள் அந்த வீடியோவின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார் அளித்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி சைபர் க்ரைம் போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், நெல்லை வீராணம் பகுதியில் தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை, திருச்சி சைபர் க்ரைம் போலீசார் இன்று காலை கைது செய்து விசாரணைக்காக திருச்சி அழைத்துச் சென்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web