திடீரென ஆசிட் வீச்சு.. நிலைக்குலைந்த கணவன்... அடித்தே கொன்ற மனைவி!

 
பத்மா

திடீரென எதிர்பாராத நேரத்தில், கழிவறையில் இருந்த ஆசிட்டை கணவன் மீது வீசியதில், நிலைக்குலைந்த கணவனை அடித்தே கொன்று விட்டு, நேராக காவல் நிலையத்திற்கு சென்று, சரணடைந்திருக்கிறார் மனைவி. எத்தனை நாட்கள் தான் இப்படி பொறுத்துப் பொறுத்து போவது... ஐம்பது வயசாச்சு... ஆனாலும் மனுஷனுக்கு ஆசை அடங்கலை... பிடிக்காத வாழ்க்கையை விட, பொங்கி எழுவது தான் தீர்வு என நினைத்திருப்பார் போல.

ஈரோடு மாவட்டம் ராவுத்தர் குளத்தில் சுப்பிரமணி, பத்மா தம்பதியர் வசித்து வந்துள்ளனர். இதில், சுப்பிரமணி அங்குள்ள தறிப் பட்டறையில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இது மனைவிக்கு தெரிய வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இது குறித்து சுப்பிரமணியை அவரது மனைவி கண்டித்ததையும் பொருட்படுத்தாமல், கள்ளக்காதலியை தனிமையில் சந்தித்து வந்துள்ளார் சுப்பிரமணி. இதனை அறிந்து கொண்ட பத்மா சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் வீட்டில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உண்டாது.

பத்மா

அப்போது கணவர் சுப்பிரமணி, நான் அப்படி தான் செல்வேன் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பத்மா, வீட்டில் இருந்த பாத்ரூமில் பயன்படுத்த வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கணவரின் முகத்தில் ஊற்றினார். இதில் முகம் வெந்தது.வலி தாங்க முடியாமல் சுப்பிரமணி அலறியதால், உடனே கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் நேராக வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று பத்மா சரணடைந்தார். 

பத்மா

அதன் பின்னர் வீட்டுக்கு சென்ற போலீசார் சுப்பிரமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து பத்மாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web