பொங்கல் சிறப்பு ரயில்கள் புறப்படும் நேரத்தில் திடீர் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க!
பொங்கல் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்டிருந்த தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை செல்லும் சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் அந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தாம்பரத்தில் இருந்து வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் பொங்கல் சிறப்பு ரயில் (வண்டி எண்.06091), மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு நெல்லை சென்றடையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், தாம்பரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரயில் செங்கல்பட்டுக்கு மதியம் 2.58 மணிக்கும், மேல்மருவத்தூருக்கு மாலை 3.23 மணிக்கும், விழுப்புரத்திற்கு 5.15 மணிக்கும், விருத்தாச்சலத்திற்கு 6.13 மணிக்கும், அரியலூருக்கு 7 மணிக்கும், ஸ்ரீரங்கத்திற்கு 7.53 மணிக்கும், திருச்சிக்கு 8.35 மணிக்கு என புதிய நேர அட்டவணைப்படி இயக்கப்படும். எஞ்சிய ரயில் நிலையங்களுக்கு பழைய நேர அட்டவணைப்படி ரயில் இயக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!