தனியார் ஆலையில் ஊழியர் திடீர் மரணம்... பொதுமக்கள் சாலை மறியல்!

 
தூத்துக்குடி
 

தூத்துக்குடியில் தனியார் ஆலையில் ஊழியர் திடீர் மரணம் எதிரொலியாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி மீளவிட்டான், யாதவர் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் மாரியப்பன் (52), இவர் விவி டைட்டானியம் கம்பெனியில் ஹெல்பராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி  பணியில் இருந்தபோது மாலை 4 மணியளவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், ஏவிஎம் மருத்துவமனை கொண்டு சென்றார்களாம்.

ஆம்புலன்ஸ்

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் அவரது உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்

இந் நிலையில், மாரியப்பன் பணி செய்தபோது சல்பர் டை ஆக்சைடு கசிவுனால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார், இதற்கு அந்த நிறுவனம் தகுந்த  நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மீளவிட்டான்  பகுதி மக்கள் தூத்துக்குடி புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?