நட்சத்திர விடுதியில் திடீர் தீ விபத்து... 11 பேர் பலியான சோகம்!

 
நியூசிலாந்து

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் பிரபலமான 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்று உள்ளது. இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினர் கூட தங்குவர். இந்த நிலையில், இந்த விடுதியில் இன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் தீ பற்றியபோது அங்கு சுமார் 70 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

நியூசிலாந்து

தொடக்கத்தில் சிறிய அளவில் இருந்த தீ, சில நிமிடங்களில் விடுதியின் அடுத்தடுத்த அறைகளுக்கு பரவியது. இதனால் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். தீ விபத்தில் பலியானோருக்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹாப்கின்ஸ் இரங்கல் தெரிவித்தார்.

நியூசிலாந்து

தகவலறிந்து வந்த போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி இன்னும் தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web