யுபிஐ பரிவர்த்தனை திடீர் தோல்வி இதனால் தான்... ரிசர்வ் வங்கி விளக்கம்!

 
யுபிஐ
 

பெட்டிக்கடைகள் தொடங்கி மால்கள் வரை யுபிஐ ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.  சில நேரங்களில் இந்த வகையான பரிவர்த்தனைகளில்  வாடிக்கையாளர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக UPI பரிவர்த்தனைகள் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்து விடுகின்றன. இதற்கான காரணத்தை ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது.வங்கிகளின் அமைப்புகளில்  திடீர் குறைபாடுகளால் மக்கள் ஆன்லைனில் பணம் செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு UPI அல்லது NPCI நிர்வாகம் மட்டும் பொறுப்பல்ல. UPI மற்றும் NPCI ன் தொழில்நுட்பம் எந்த சூழ்நிலையிலும் பணம் செலுத்துவதில் தோல்வியடையாத வகையில்  தான் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  

யுபிஐ

UPI பேமெண்ட் தோல்விக்கு முக்கிய காரணம் வங்கிகளின் பலவீனமான தொழில்நுட்பம் தான்.  இது குறித்த நிதிக்கொள்கை குழுக்கூட்டத்தை ரிசர்வ் வங்கி கடந்த வாரம் நடத்தியது. இதன் பிறகு பேசிய  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், UPI பேமெண்ட் தோல்வி குறித்து  வேலையில்லா நேரம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலும் அதாவது பணம் செலுத்தும் முறையின் சிக்கல், NPCI இலிருந்து ஏதேனும் தடைகள் உள்ளதா என்பது  பரிசோதனை செய்யப்பட்டது.  ஆனால்  NPCI தரப்பில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை  இந்த பிரச்சனை வங்கிகளில் இருந்து வருகிறது எனக் கூறினார்.

யுபிஐ


மே மாதத்தில் ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் 45கோடிக்கும் அதிகமான UPI  பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மே மாதத்தில் மட்டும் பல்வேறு வகையான வங்கிகளில் 31 செயலிழப்பு வழக்குகள் இருந்தன.இதனால் தொடர்ந்து  47 மணி நேரத்திற்கும் மேலாக பணம் செலுத்துவது தடைபட்டது. UPI  ன் பயன்பாடு அதிகரித்து வருவதால்  நேரம் குறைவது பெரிய அளவில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

UPI ல்  பரிவர்த்தனை தோல்வியடைந்து, உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பணம் தானாகவே ஒரு மணி நேரத்திற்குள் திரும்ப வந்து சேரும் சில நேரங்களில்  பணத்தைத் திரும்பப் பெற 24 முதல் 48 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகும், பணத்தைத் திரும்பப் பெறவில்லை எனில் வங்கிகளில் புகார் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web