தென்காசியில் பரபரப்பு... தனியார் கேஸ் நிறுவன வாகனத்தில் திடீர் தீ விபத்து!
தென்காசி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான எரிவாயு நிறுவன வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் எரிவாயு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் நேற்றிரவு சங்கரன்கோவில் நகரில் சென்றுக் கொண்டிருந்த போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
வாகனத்தில் சிலிண்டர்கள் இல்லாத போது இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக வாகனத்தில் இருந்து ஓட்டுநர் கிழே இறங்கி உயிர் தப்பினார்.
தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். வாகனத்தில் சிலிண்டர்கள் இல்லாத போது தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!