தனியார் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து... 50 லட்சம் பொருட்கள் தீயில் கருகி நாசம்!
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய டயர்கள் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய டயர்கள் கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியை கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. அதிகாலை நேரத்தில் ஊழியர்கள் பணியில் இல்லை என்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தல குப்பத்தில் உள்ள சென்னை கிரம்ப் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சக்கணக்கான இரும்பு கழிவுகள் எரிந்து அந்த பகுதியில் புகை மூட்டத்தையும் கடுமையான நெடியையும் உண்டாக்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
