பகீர்... 36000 அடி உயரத்தில் பயணிகள் விமானத்தில் திடீர் தீவிபத்து!

 
விமான விபத்து
 


கிரீஸ் நாட்டின் கோர்ஃபு விமான நிலையத்திலிருந்து  ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகருக்கு  ஆகஸ்ட் 16 ம் தேதி காண்டோர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 757 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.  இதில், 273 பயணிகள், 8 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில மணிநேரங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, வலதுபுற என்ஜினில் தீப்பற்றி எரிந்துள்ளது.

உடனடியாக விமானிகள், அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை கொடுத்து இத்தாலியின் பிரின்டிசி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர். விமானத்தின் வலதுபுற என்ஜினில் தீப்பற்றியதை அறிந்த விமானிகள் உடனடியாக அந்த என்ஜினை அணைத்துவிட்டனர்.   இதனால், விமானத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவுவது தவிர்க்கப்பட்டுள்ளது.  முதலில் கோர்ஃபு விமான நிலையத்துக்கு திரும்ப முயற்சித்த நிலையில், பின்னர் மற்றொரு என்ஜின் உதவியுடன் தொடர்ந்து பறக்க முடிவு செய்தனர். 

தீ விபத்துக்கு  பிறகு சுமார் 40 நிமிடங்கள் வரை வானத்தில் பறந்து, இத்தாலியின் பிரின்டிசி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்ட பின்னர், விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர். விமானத்தின் ஒரு என்ஜின் அணைக்கப்பட்டதால், விமானத்தின் உள்ளே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். பிரின்டிசி விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கோரிய காண்டோர் ஏர்லைன்ஸ், மாற்று விமானம் மூலம் பயணிகளை ஜெர்மனிக்கு அனுப்பிவைத்தனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?