அருவியில் திடீர் வெள்ளம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இழுத்துச் செல்லப்பட்ட துயரம்; 3 பேர் உடல்கள் மீட்பு !

 
மும்பை


மும்பை அருகே லோனாவாலா இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் இருவரை காணவில்லை. தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள், இருவரும் நீந்திப் பாதுகாப்பாகச் சென்றதாகத் தெரிவித்தனர். 


ஏழு பேர் கொண்ட குடும்பம் ஒன்று மும்பையில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசமான லோனாவாளாவுக்கு விடுமுறைக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பூசி அணையின் உப்பங்கழிக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணை நிரம்பியதால் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மும்பை


வலுவான நீரோட்டத்தில் இருந்து தப்பிக்க அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஏழு பேரும் மெதுவாக கரைக்கு நகர்ந்து வர முயற்சித்தனர். ஆனால் வெள்ளம் அதிகரித்த நிலையில், அடுத்த சில நொடிகளில் இவர்கள் குடும்பத்தினரோடு நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் நின்றிருந்த பாசி படிந்த பாறைகளின் மீது குடும்பத்தினர் தவறி விழுந்து, தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து அருவியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. அருவிகளின் நடுவே உணவுக் கடைகள் இருப்பதாக உள்ளூர்வாசிகள் புகார் தெரிவித்தனர். மேலும், போதிய பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லாததால், இடம் தெரியாத சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி இந்த பகுதியில் விபத்தில் சிக்குவதாக தெரிவித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!