பெரும் சோகம்...கொட்டித் தீர்த்த கனமழை.. சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் கார் மூழ்கி ஐடி பெண் ஊழியர் பலி!

 
பானு ரேகா

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நேற்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கோடையில் கனமழை பெய்தது. பகல் முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் பெங்களூரு நகரில் உள்ள சாலைகள், சுரங்கப் பாதைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழை நீரானது குளம் போல தேங்கி நின்றது.

அந்த வகையில், பெங்களூரு விதான் சவுதா அருகே உள்ள கே.ஆர். சர்க்கிள் சுரங்கப் பாதையில் மழை இடுப்பளவுக்கு நேங்கி தேங்கி நின்றது. அதில் பேருந்து உள்ளிட்ட ஒருசில வாகனங்கள் சென்றநிலையில், அவ்வழியாக கார் ஒன்றும் கடந்து சென்றுள்ளது.

பானு ரேகா

ஆனால், பேருந்து கடந்துசென்ற நிலையில் அந்த கார் தேங்கி நின்ற மழை நீரில் சிக்கி கொண்டது. பின்னர் காரில் தண்ணீர் நிரம்பியதால் சிறிது நேரத்தில் கார் மூழ்கியது. இதில் காரில் பயணித்த 5 பேரும் மூழ்கினர். இதனால் பதறிய அவர்கள் காருக்குள் இருந்து வெளியேற தீவிரமாக முயற்சித்தனர்.

பானு ரேகா

அதேநேரம் அக்கம்பக்கத்தினர் கார் தண்ணீரில் மூழ்குவதை பார்த்து அவர்களும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் இதில் நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அருகே உள்ள மர்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 22 வயதான இளம் பெண் பானு ரேகா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே உயிரிழந்த இளம்பெண்ணின் உடலுக்கு முதலமைச்சர் சித்தராமையா நேரில் அஞ்சலி செலுத்தினார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web