திடீர் பிரசவ வலி... ஐசியூ வார்டாக மாறிய அரசு பேருந்து... கடவுளாய் மாறிய மருத்துவர்கள்!

 
ஜரீனா

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அரசு பேருந்தில் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த பெண்மணி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். 
நேற்று வழக்கத்திற்கு மாறாக அதிக கூட்டத்துடன் பெரமங்கலம் அருகே கேஎஸ்ஆர்டிசி கேரள மாநில அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்தில் மலப்புரம் திருநாவையைச் சேர்ந்த மன்றோவீட்டில் லிஜிஷ் ஜேக்கப் என்பவரது  மனைவி ஜரீனா (37)  பயணம் செய்துக் கொண்டிருந்தார். நிறைமாத கர்ப்பிணியான ஜரீனா, பேருந்து பயணத்தின் போது திடீர் பிரசவ வலியால் துடித்த நிலையில், பேருந்தையே ஐசியூ வார்டாக மாற்றிய மருத்துவர்கள் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், ஜரீனாவும், பிறந்த குழந்தையும் தற்போது நலமுடன் உள்ளதால் அருகில் உள்ள அமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
நேற்று திருச்சூரில் இருந்து கோழிக்கோடு மாவட்டம் தொட்டில்பாலம் நோக்கி கேஆர்சிடிசி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் நிறைமாத கர்ப்பிணியான ஜரீனா, தனியாக பயணம் செய்த நிலையில், குட்டிப்புரத்திற்கு டிக்கெட் எடுத்து திருச்சூரில் பேருந்தில் பயணித்துள்ளார். 

 



நிறைமாத கர்ப்பிணி என்பதால் பேருந்தில் கூட்டம் இருந்த போதும், அவருக்கு வசதியான இருக்கை பிற பயணிகள் கொடுத்து உதவியிருக்கின்றனர். பேருந்து அமலா மருத்துவமனைப் பகுதியைக் கடந்தபோது, ​​கடுமையான வயிற்றுவலி இருப்பதாகக் கூறி, தன் கணவரிடம் தொலைபேசியில் தெரிவிக்கச் சொல்லி அருகில் இருந்த பயணிகளிடம் கேட்டுக் கொண்டார் ஜரீனா. அடுத்த சில நொடிகளில் ஜரீனாவுக்கு பிரசவ வலி தீவிரமடைந்து, அவரால் தனது கணவரின் தொலைபேசி எண்களை கூட முழுமையாக சொல்ல முடியவில்லை. அதன் பின்னர், உடனடியாக பேருந்தின் நடத்துனர், டிரைவரிடம் பேருந்தை யூ-டர்ன் எடுத்து அருகிலுள்ள அமலா மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். 
கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து, திடீரென மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்ததைக் கண்டதும் மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மருத்துவமனைக்குள் நுழையும் சாலையில் ஒரு சிறிய சாக்கடை இருந்துள்ளது. பேருந்து சாக்கடையில் இறங்கி ஏறும் போது பேருந்துக்குள் திடீரென சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையின் அழுகையை ஓட்டுநரும், நடத்துனரும் கேட்டுள்ளனர். ஜரீனாவின் அருகில் நின்ற இரண்டு பெண் பயணிகள் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர். 

 

ஜரீனா


நடத்துனரும், ஓட்டுநர் நிலைமை குறித்து மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர், அதன் பின்னர், மருத்துவரும், செவிலியர்கள் குழுவினரும், பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளையும் இறங்கச் சொல்லிவிட்டு பேருந்தில் ஏறினர். உடனடியாக அரசு பேருந்து ஐசியு வார்டாக மாறுதலடைந்தது. மருத்துவர்கள் ஜரீனாவுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளித்து, பிரசவ நடைமுறைகளை முடித்த பிறகு, தாய் மற்றும் குழந்தை இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் தகவல் தெரிந்து ஜரீனாவின் கணவர் மருத்துவமனைக்கு வந்து இருவரையும் பார்த்தார்.
அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் சரியான நேரத்து நடவடிக்கையால் தாய் மற்றும் அவரது குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!