சாலையில் திடீரென கொட்டிய பணமழை.. அள்ளிச்சென்ற பொதுமக்கள்.. குழம்பிய போலீசார்!

 
உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சாலையில் சிதறி கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் சேகரித்தனர். தேனி நெடுஞ்சாலையில் மாமரத்துப்பட்டி விலக்கு பகுதியில் தேனியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வாகனத்தில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் நெடுஞ்சாலையில் சிதறின. இதையடுத்து சாலையில் கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை சுமார் 100 மீட்டர் தூரம் வரை அப்பகுதி மக்கள் போட்டி போட்டு கொண்டு எடுத்து சென்றனர்.

சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம் குறித்து யாரும் புகார் தெரிவிக்காததால், புகார் கொடுத்தாலும் பொதுமக்கள் அனுப்பிய பணத்தை திரும்ப பெற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள ரூ.500 நோட்டுகள் சாலையில் சிதறி கிடந்தது தெரியவந்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web