சூறைக்காற்று.. பேருந்து நிறுத்தத்தில் மரம் விழுந்து கல்லூரி மாணவர் மரணம்!

 
நந்து

கேரளா வயநாடு பகுதி முழுவதும் நேற்று பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தனர். இந்த நிலையில் மழையின் போது வெளியே சென்றிருந்த கட்டிக்குளத்தைச் சேர்ந்த நந்து (19) என்ற கல்லூரி மாணவர், மாலையில் வீடு திரும்பினார்.

நந்து

அப்போது மழையின் வேகம் அதிகரித்ததால் மாலை 4 மணியளவில் புளியர்மலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நிழற்குடை கீழ் காத்திருந்தார். அப்போது கனமழையின் போது காற்று வீசியதால் அருகே நின்ற தென்னைமரம் நிழற்குடை மேல் விழுந்தது. இந்த விபத்தில் மாணவன் நந்து பலத்த காயம் அடைந்தார். 

நந்து

பின்னர் அருகில் உள்ளவர்கள் நந்துவை மீட்டு உடனடியாக மேப்பாடி மூப்பன்ஸ் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு நந்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பேருந்துக்காக காத்திருந்த மாணவர் தென்னைமரம் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web