பால் கொள்முதல் விலை திடீர் குறைப்பு... விவசாயிகள் அதிர்ச்சி!

 
பால்

 தமிழகம் முழுவதும்  தினமும் 1.50 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஆவின் நிறுவனம் 35 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது.  மீதமுள்ள பால், உள்ளூர் தேவைக்கும், பல்வேறு நிறுவனங்களில் பால் பொருட்கள் தயாரிப்பதற்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம்,  ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் கடந்தாண்டு முதல் பால் உற்பத்தி குறைந்து, தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.  தற்போது  பல்வேறு வட மாநிலங்களிலும் பால் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.

அமுல் பால்

இதனால், தமிழகத்தில் செய்து வந்த பால் கொள்முதலை, பல்வேறு நிறுவனங்கள் குறைக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன் பால் கொள்முதல் விலையும் லிட்டருக்கு ரூ5  வரை குறைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து பல நிறுவனங்களின் கொள்முதல் நிலையமும் மூடப்பட்டு வருகிறது. இதனால், பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  பால் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாகக் கூறி, பால் கொள்முதலை மட்டுமின்றி, விலையையும் தனியார் நிறுவனங்கள் குறைத்து விட்டன.  பால்வளத் துறையால், தனியார் நிறுவனங்களின் விலை குறைப்பை தட்டிக் கேட்க முடியாத நிலை நிலவி வருகிறது.  தமிழகத்தை பொறுத்தவரை பால்வளத்துறை அமைச்சர் ஆவின் பால் கொள்முதலில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர்.  

பால்

தனியாருக்கு பால் வழங்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இப்பிரச்னையில் அரசு தலையிட்டு, குறைக்கப்பட்ட பால் கொள்முதல் விலையை மீண்டும் அதிகரித்து வழங்க உடனடி நடவடிக்கை வேண்டும். தவறினால்  தலைமை செயலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளோம் என விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web