நாளை முதல் கனரக வாகனங்களுக்கு திடீர் கட்டுப்பாடுகள்!

 
கனரக வாகனம்
 

ஜூலை 1ம் தேதி முதல் கனரக வாகனங்களுக்கு திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் செல்ல இந்த வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதிக்குள் இவை மலையை விட்டு கீழிறங்க  உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பொதுவாக  ஜேசிபி வாகனங்கள், பாறைகளுக்கு வெடி வைப்பது, ஆழ்துளை கிணறு அமைப்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில்  கட்டுமானப் பொருட்களை அகற்றுவதற்கும், விவசாய நிலம் உட்பட பிற வகை நிலங்களை சமன் செய்வதற்காகவும் அனுமதியில்லாமல் மண் அள்ளும் இயந்திரம் (ஜேசிபி)  உட்பட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கனரக வாகனம்
கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு,  காட்டேஜ்கள், ரிசார்ட்கள் அதிகளவில் கட்டப்பட்டு வருகின்றன.   கொடைக்கானலில் மழைக்காலத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து ஜூலை 1-ம் தேதி முதல் மண் அள்ளும் இயந்திரம், ஆழ்துளை கிணறும் தோண்டும் வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து  கோட்டாட்சியர் “கொடைக்கானல் மலைப்பகுதியில் விதிகளை மீறி மண் அள்ளும் இயந்திரம், பாறைகளை துளையிடும் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஜூன் 30-ம் தேதிக்குள் இந்த வாகனங்களை கொடைக்கானலில் இருந்து கீழே இறக்க வேண்டும். ஜூலை 1-ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட இந்த வாகனங்களை பயன்படுத்தினால், வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  

கனரக வாகனம்
மீண்டும், பயன்படுத்தினால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்வதுடன் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதற்கு அரசு அதிகாரிகள் உதவினால் அவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சென்ற 2 மாதங்களில் அனுமதியின்றி இயக்கிய மண் அள்ளும் இயந்திரம், ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனங்களுக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,” எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது