திடீர் தொழில்நுட்ப கோளாறு... புறப்பட்டு 20 நிமிடங்களில் திரும்பி வந்த ஏர் இந்தியா விமானம்!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமானம் தாய்லாந்தின் பூகெட் நகரத்திற்கு புறப்பட்டுச் சென்றது.

விமானம் புறப்பட்ட 20 நிமிடத்தில் மீண்டும் ஐதராபாத்திற்கே திரும்பி வந்தது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் ஐதாராபத்திற்கே திருப்பி விடப்பட்டதாகவும், பயணிகள் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

விமானம் ஐதாராபத் திரும்பி வந்த பிறகு பயணிகள் நீண்ட நேரம் விமானத்திற்குள்ளே அமர வைக்கப்பட்டுவிட்டதாக பலரும் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
