திடீர் பதற்றம்... மியான்மர் எல்லையில் இந்தியா ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்?!

 
ட்ரோன்

மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீரென ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து உல்ஃபா(I) அமைப்பு நேற்று ஜூலை 13ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், “பல நடமாடும் முகாம்களில் அதிகாலையில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தடைசெய்யப்பட்ட அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் தாக்குதல்களில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் 19 பேர் காயமடைந்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் முப்படை காஷ்மீர்

இந்திய ராணுவத்திடம் இதுபோன்ற நடவடிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை என்று லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறினார். கடந்த 35 ஆண்டுகளாக தடைசெய்யப்பட்ட அமைப்பான அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா), மியான்மரை தளமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?