திடீரென வெடித்து சிதறிய ஜெலட்டின் குச்சிகள்.. கார் சென்டரில் பரவிய தீயால் ரூ.40 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து நாசம்!

 
ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம் அருகே ஜெலட்டின் குச்சிகள் வெடித்து கார் சர்வீஸ் சென்டர் தீப்பிடித்து எரிந்ததில் கார்கள், இருசக்கர வாகனங்கள், பொருட்கள் எரிந்து நாசமானது. 40 லட்சம் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

தீ

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தில் வசிப்பவர் ரூபன். இவர் அதே பகுதியில் சொந்தமாக கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியை ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முஸ்தாக் (25) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். பாறைகளை உடைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை அந்த இடத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். நேற்று இரவு கார் சர்வீஸ் சென்டரில் வேலை முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

தீ விபத்து

இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் செட்டில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் திடீரென வெடித்து சிதறின. இதில் கார் சர்வீஸ் சென்டர் தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது. இதில் கார், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சுமார் ரூ. 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே, தீவிபத்தின் போது செட்டில் இருந்த பொருட்களை அகற்ற முயன்ற ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ரியாஸ் (25) என்ற வாலிபர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web