திடீரென மாயமான கைக்குழந்தை.. போலீசாரின் துரித நடவடிக்கையால் நிம்மதியடைந்த பெற்றோர்கள்!

 
 திலீப் - ஷோபா

ஆந்திராவை சேர்ந்த தம்பதிகள் திலீப் - ஷோபா. இவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி கீ செயின் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மணிகண்டா என்ற 5 மாத குழந்தை உள்ளது. பூதலூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் குழந்தையுடன் இரவில் தூங்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்து தம்பதி, குழந்தை இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் ஷோபா எழுந்து பார்த்தபோது, ​​தனது அருகில் தூங்கிக்கொண்டிருந்த 5 மாத குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக திலீப்பை எழுப்பி ரயில் நிலையம் முழுவதும் குழந்தையை தேடினார். ஆனால் குழந்தையை காணவில்லை என உடனடியாக பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள முட்புதரில் குழந்தை கிடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், குழந்தையை பெற்றோருடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு குழந்தையை யாரேனும் கடத்திச் சென்றார்களா அல்லது குழந்தை தானே தவழ்ந்து சென்றதா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குழந்தை காணாமல் போன 2 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரின் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web