அட... திருக்குறளுக்கு கரும்பு ஜூஸ் இலவசம்... தள்ளுவண்டியில் வளரும் தமிழ் !
திருக்குறளை உலகப் பொதுமறை எனக் கொண்டாடுகிறோம். ஆனால் தேர்வில் 2 மார்க்குகளுக்காக படிப்பதை தவிர வீட்டுப் பிள்ளைகளை திருக்குறள் படிக்கவும், அதனை புரிந்து கொள்ளவும் தனிமனிதர்கள் முயற்சி எடுப்பதே இல்லை. இந்தக் குறையை போக்க தள்ளுவண்டியில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்யும் எளிய இளைஞர் ஒருவர் இதனை செய்து சத்தமின்றி சாதனை படைத்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்குறள் சொன்னால் கரும்பு ஜீஸ் இலவசம் என்ற கடை உரிமையாளரின் அறிவிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் ஜூஸ் கடைகளிலும், பழக்கடைகளிலும் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இந்நிலையில் பலரும் கவரும் வகையில் காஞ்சிபுரத்தில் திருக்குறள் கூறினால் கரும்பு ஜுஸ் இலவசம் என்ற அறிவிப்பு பலகை நம்மை வரவேற்கிறது.
இந்தக் கடை உரிமையாளரின் அறிவிப்பால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து திருக்குறளை கூறி இலவசமாக கரும்பு ஜுஸ் வாங்கி குடித்து செல்கின்றனர். தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அதிக அளவில் கரும்பு ஜூஸ் கடைக்கு வருகை தந்து சில்லென்று கரும்பு ஜூஸை குடித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கரும்பு ஜூஸை கொடுத்து திருக்குறளை வளர்க்க கடை உரிமையாளர் எடுக்கும் முயற்சி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவன் கோகுல். இவர் கரும்பு ஜூஸ் விற்பனை செய்து வரும் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் சாலையில் தமிழ்நாடு ஹோட்டல் எதிரில் இவரது கடை அமைந்துள்ளது. சின்னஞ்சிறு வயது முதலே தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்ட கோகுல் பொதுமக்கள் கவரும் வகையில் திருக்குறள் கூறிய குழந்தைகளுக்கு இலவசமாக ஜூஸ் வழங்கி சிறப்பித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தனது கடைக்கு ஜுஸ் வாங்க வரும் 10 வயது உட்பட்ட குழந்தை ஏதாவது ஒரு திருக்குறளை கூறினால் ஒரு கரும்பு ஜூஸ் இலவசம். 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 3 திருக்குறள் கூறினால் ஒரு கரும்பு ஜூஸ் இலவசம் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அறிந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்று திருக்குறளை கூற வைத்து இலவசமாக கரும்பு ஜுஸ் குடித்துச் செல்கின்றனர்.
இந்த அறிவிப்பால் விடுமுறை காலகட்டத்தில் பிள்ளைகளுக்கு திருக்குறளை ஞாபகப்படுத்துவோடு இலவசமாக ஜுஸ் கிடைக்கிறது என்கின்றனர் பெற்றோர். இப்போது பெரும்பாலான மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கமே இல்லை எனலாம். இதன் மூலம் மாணவர்களின் வாசிக்கும் பழக்கமும் அதிகரிக்கும். இளைய தலைமுறை பண்போடு வளர நமக்கு கிடைத்த அறநூல் திருக்குறள். திருக்குறளை வாசிக்க வேண்டும் என்பதற்காக இலவச ஜுஸ் வழங்குகிறோம் என்கிறார் ஜுஸ் கடை உரிமையாளர் கோகுல். இவரது அறிவிப்பு பலரது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!