தற்கொலைப் படை தாக்aகுதலில் 25 பேர் பலி!

 
பாகிஸ்தான்
 


பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பேரணி ஒன்று நடந்தது. பேரணியில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் வீடு திரும்ப தயாரான போது திடீரென தற்கொலை படை தாக்குதல் நடந்தது. 

பாகிஸ்தான்
மக்கள் கூடியிருந்த பகுதியில் குண்டு வெடித்ததில், 25 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் மகன், அக்தர் மெங்கல், பாதுகாப்பாக தப்பினார். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான்

இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமேற்கு பாகிஸ்தானில் ஒரு துணை ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் 6 பயங்கரவாதிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?