பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்... 16 பேர் பலி, 14 பேர் கவலைக்கிடம்!

பாகிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 16 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் காடி பகுதியில் நேற்று அதிகாலை ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுக்கு சொந்தமான வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. இந்த வாகனங்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Breaking News:
— Bahot | باہوٹ (@bahot_baluch) June 28, 2025
A suicide bomber targeted a military convoy in the Khaddi area of North Waziristan, Khyber Pakhtunkhwa, on Saturday, killing at least 13 Pakistani military personnel and injuring 24 others, including 14 civilians.
According to Officals, the attacker rammed an… pic.twitter.com/Fo8EsnqCpp
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை கொண்டு மோதி இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 16 ராணுவ வீரர்கள் பலியானதாக தெரிகிறது. இதில் பொதுமக்களில் 14 பேர் உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ராணுவ நடமாட்டம் காரணமாக அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஹபீஸ் குல் பகதூர் குழுவின் துணைப் பிரிவான உசுத் அல் ஹர்ப் என்ற குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!