செல்வ வளம் பெருகச் செய்யும் சுக்கிரவாரப் பிரதோஷம்...!!

 
செல்வ செழிப்புடன் வாழ செவ்வாய் பிரதோஷம்!  வழிபடும் முறை!

இன்று சுக்கிர வார பிரதோஷ தினம். பிரதோஷ தினங்களில், எப்படி சனி பிரதோஷம் என்று விசேஷமாக வழிபடுகிறோமோ அதைப் போலவே வெள்ளிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷ தினங்களும் விசேஷமானவை. கடவுளை வழிபட அனைத்து நாட்களும் உகந்தவையே என்றாலும், நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப அதற்குரிய நாளில் வழிபட பாவங்கள் கரைந்தோடி சகல இன்பங்களையும் பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

இன்று சுக்கிர வாரப் பிரதோஷம். பொதுவாக பிரதோஷம் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அல்லது பௌர்ணமியை அடுத்து வரும் திரயோதசி திதியில் பிரதோஷம் அனுஷ்டிக்கப் பட்டு வருகிறது.சிவபெருமானுக்கு உகந்த நாள் பிரதோஷ நாள். பிரதோஷ வேளை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் நமது கர்மவினைகள் நீங்கவும், நமது பிரார்த்தனைகள் நிறைவேறவும் வழிபாடு செய்திட மேன்மையான பலன்களை பெற முடியும்.

அந்த வகையில் வெள்ளிக்கிழமையான இந்த பிரதோஷ நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு சிவபெருமான் உடனே செவி சாய்க்கிறார் என்கின்றது சிவபுராணம். பிரதோஷத் தினத்தில் சிவ வழிபாடு செய்திட வாழ்வின் இன்னல்கள் நீங்கி சுபிட்சங்களை பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு.இன்றைய தினத்தில் சிவபெருமானுடன் நந்தியையும் தரிசித்து வில்வம், செவ்வரளி, அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இயன்ற அளவு வயிற்றுப் பசியால் வாடுபவர்களுக்கு அன்னமிடலாம்.பொதுவாக எல்லா பிரதோஷங்களும் தனி சக்தி வாய்ந்தவை

வில்வம் சிவன் சிவபெருமான் பிரதோஷம்

இந்த காலத்தில் தான் சிவன், நந்தியின் கொம்புகளுக்கிடையில் ஆடுகின்றார். இந்த நேரத்தில் அவரின் ஆனந்த தாண்டவத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் கூடி நின்று பக்தி பரவசத்துடன் இந்த பிரதோஷ வேளையில் கண்டு களிப்பதாக ஐதிகம்.

பிரதோஷ வேளையான மாலை நேரத்தில் வீட்டில் இருந்த படியே ‘ஓம் நமச்சிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்க இதுவரை முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அதுவாகவே அகன்று விடுவதை அனுபவ பூர்வமாக உணரலாம்.

செல்வ செழிப்புடன் வாழ செவ்வாய் பிரதோஷம்!  வழிபடும் முறை!

இதனால் உடலும், மனமும் ஆரோக்கியமடைகிறது. நம் குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும். நம்மை எதிரிகளாக நினைப்பவர்கள், அவர்களாகவே நமது பாதையிலிருந்து விலகிச் சென்று விடுவார்கள். அதிலும் சுக்கிரவார தினமான இன்று அனுசரிக்கப்படும் பிரதோஷ வழிபாடு சகல செல்வங்களையும் கொண்டு வந்து சேர்த்து, சுக்கிர யோகத்தைத் தரும் என்பது ஐதீகம். பிரதோஷ நேரத்தில் அருகில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை மனமார தரிசித்து உளமாற பிரார்த்தனை செய்து கொண்டால் வாழ்வில் அனைத்து இன்னல்களும் நீங்கி மேன்மை பெறலாம். 

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web