செம... வெள்ளி கிரகத்திற்கு ”சுக்ராயன்” விண்கலம்... இஸ்ரோ தலைவர்!

 
வெள்ளி

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தொடர்ந்து  வல்லரசு நாடுகளுக்கு இணையாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்திற்கு அருகே சுமார் 600 கிமீட்டர் தொலைவில் நிலவின் தடம் பதித்து சாதனை படைத்தது.
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் திட்டமிட்டப்படி அனைத்து பணிகளையும் மேற்கொண்டு உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. அத்துடன்  நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் ஆய்வு செய்த ரோவர், அதில் நீர் மூலக்கூறுகள், இரும்பு, கந்தகம், ஸிங்க் உட்பட   பல தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்தது.  

சந்திராயன்
 செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து  ஆதித்யா எல் 1 விண்கலம் மூலம்  சூரியனின் மேற்பரப்பையும் ஆய்வு செய்து வருகிறது. அத்துடன்  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இதற்காக விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ள 6 வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.  இத்திட்டத்தின் அடுத்தக்கட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் இஸ்ரோ, தற்போது வெள்ளி கிரகத்தையும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் சுக்ரயான் திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என இஸ்ரோ  தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

ஆதித்யா எல்
இத்திட்டம் குறித்து  இஸ்ரோ தலைவர் சோம்நாத், சுக்ரயான் திட்டத்தை விரைவில் செயல்படுத்துவதற்கான யோசனை மற்றும் தொழில்நுட்ப வசதிகள் தயாராக உள்ளது.  2024ல்  சூரியனில் இருந்து இரண்டாவது கிரகமான வெள்ளியை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  வெள்ளி கிரகத்திற்கு இஸ்ரோ விண்கலத்தை அனுப்பும் பட்சத்தில் அது இந்தியாவின் முதல் பயணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web