‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி !

 
sundar c
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ திரைப்படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கவுள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

sundar c

லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற இளம் இயக்குநர்களுடன் இணைந்த ரஜினி, இம்முறை மூத்த இயக்குநரான சுந்தர்.சியுடன் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது அதிரடியாக ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

“தவிர்க்க முடியாத காரணங்களால் கனத்த இதயத்துடன் ‘தலைவர் 173’ திரைப்படத்திலிருந்து விலகுகிறேன்” என்று சுந்தர்.சி அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால், ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்பது குறித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் புதிய ஆவல் எழுந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!