வைரல் வீடியோ... சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்ததும் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட சுனிதா வில்லியம்ஸ்!

 
சுனிதா வில்லியம்ஸ்

3வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்ததும், மகிழ்ச்சியில் சுனிதா வில்லியம்ஸ் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், தனது சக பணியாளரான புட்ச் வில்மோருடன், போயிங் ஸ்டார்லைனர் மூலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்துள்ளார். 

59 வயதான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி மையத்திற்கு செல்வது இது 3வது முறை. அதே சமயம் விண்கலத்தின் முதல் பயணத்தில் பைலட்டாக செயல்பட்டு சோதனை செய்த முதல் பெண்மணி என்ற பெருமையையும் சுனிதா வில்லியம்ஸ் பெற்றுள்ளார். விண்வெளி மையத்திற்குச் சென்றுள்ள சுனிதா, தன்னுடன் விநாயகர் சிலையையும், பகவத் கீதை புத்தகத்தையும் கொண்டு சென்றுள்ளார்.

ஏற்கெனவே இருமுறை விண்வெளி பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இம்முறை சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்ததுமே மகிழ்ச்சியில் சுனிதா வில்லியம்ஸ் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  அதில் நடனமாடியபடியே அங்கிருந்த சக ஆராய்சியாளர்களை கட்டியணைத்து சுனிதா வில்லியம்ஸ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தொடர்ந்து மீண்டும் உற்சாகமாக நடனமாடியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web