சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

 
சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியினரான சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார். இதனையடுத்து அங்கு விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். 

அவரது முதல் விண்வெளிப் பயணம் 2006ம் ஆண்டிலும், 2வது விண்வெளிப் பயணம் 2012ம் ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது. தற்போது 3வது முறையாக மீண்டும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

போயிங் நிறுவனம் தயாரித்துள்ள விண்கலம் மூலம் கடந்த மே மாதம் 7ம் தேதி சர்வதேச விண்வெளிக்கு புறப்படுவதாக இருந்தது. விண்கலம் ஏவப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் கடைசி நேரத்தில் திடீரென நிறுத்தப்பட்டதாக நாசா அறிவித்தது. இதையடுத்து மீண்டும் நேற்று முன்தினம் புறப்படுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தொழில்நுட்ப பிரச்சனைக் காரணமாக கடைசி நேரத்தில் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. 

இதன் மூலம் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு மேற்கொள்ளவிருந்த சுனிதா வில்லியம்ஸின் சாதனை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web