நடிகை சன்னி லியோன் பெயரில் நூதன மோசடி.. விசாரணையில் அதிர்ச்சி!
சத்தீஸ்கர் மாநில பாஜக அரசு மாதாந்திர உதவியாக திருமணமான பெண்களுக்கு ரூ. 1,000 வழங்குகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வரும் நிலையில், பயனாளிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள தலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர ஜோஷி என்பவர் நூதன மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
அதாவது ரூ.1000 தொகையை பெறுவதற்கான அரசு விண்ணப்பத்தில் சன்னி லியோன்-ஜானி சின்ஸ் ஜோடியை தம்பதி என கூறி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வங்கிக் கணக்கிற்கான உதவி உடனடியாக நிறுத்தப்பட்டு, வீரேந்திர ஜோஷி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோசடி எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பஸ்தார் மாவட்ட ஆட்சியர் ஹரீஷ் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோல் எத்தனை மோசடிகள் நடந்துள்ளது என சோதனை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!