சூப்பர்!! அரசு அலுவலகங்களில் ”தினம் ஒரு திருக்குறள்” !!

 
தினம் ஒரு குறள்

தமிழக அரசு எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் வகையில் அனைத்து துறைகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அரசுப்பணிக்கான தேர்வுகள், போட்டித்தேர்வுகள் என அனைத்திலும் தமிழ் வழி கற்றலை ஊக்குவித்து வருகிறது. எந்த வகையான பள்ளியாக இருந்த போதிலும் தமிழ் வழிக் கல்வி அவசியம் என உத்தரவு பிறப்பித்துள்ளது. கடைகள், வணிக வளாகங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க அறிவுறுத்தியுள்ளது. தமிழ் வழி கற்பவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளித்து வருகிறது.

தினம் ஒரு குறள்

அதன் அடுத்த கட்டமாக அரசு அலுவலகங்களில் தினம் ஒரு திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமைச்செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ”அனைத்து  பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயம் ” .  கலைச் சொல்லையும், திருக்குறளையும் அலுவலகங்களையும்  தவிர மாநிலத்தில் உள்ள  தலைமைச் செயலகத் துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஊரியங்கள், கழகங்கள் இணையங்கள் செயல்படும்  தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் தினமும்  ஒரு  ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லையும் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும்.

இறையன்பு

மேலும் ஒரு திருக்குறளை பொருளுடன் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும்.  திருக்குறளின் முப்பாக்களில் அறத்துப்பால், பொருட்பால்  அதிகாரங்களில் அதன் பொருளுடனும் தமிழ் ஆட்சிச் சொல் அகராதியில் உள்ள சொற்களில் ஓர் ஆங்கில சொல்லை அதற்குரிய தமிழ்ச் சொல்நுடனும் 4×3 என்ற அளவில் அனைத்து அலுவலக கரும்பலகை வெள்ளை பலகையிலும்  எழுதி வைக்க வேண்டும். அனைத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள் முதன்மை செயலாளர்கள்,  செயலாளர்கள், துறைத் தலைமை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு கழகங்கள், வாரியங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். இதனை  கண்காணித்து அதற்குரிய அறிக்கைகளை அரசுக்கு உறுதி செய்ய வேண்டும். இதற்கான சான்றுகளை  தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் வளர்ச்சி மண்டல துணை இயக்குநர் / மாவட்ட நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.' என  தெரிவித்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web