சூப்பர்!! உலக வங்கியின் தலைவராகிறார் இந்திய வம்சாவளி அஜய் பங்கா!!

 
அஜய் பங்கா

உலக வங்கி அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. உலக வங்கி என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கி வரும் பன்னாட்டு நிதி நிறுவனம்.  வளரும் நாடுகளில் நிலவும் வறுமையை குறைப்பதே இதன் நோக்கம். அத்துடன் வெளிநாட்டு முதலீடு, பன்னாட்டு வணிகங்களை பரிந்துரை செய்வதிலும் உலக வங்கி பெரும்பங்காற்றி வருகிறது. உலக வங்கியின் தலைவர்களாக எப்போதும் அமெரிக்கர்கள் தான் இருந்து வந்துள்ளனர்.

அஜய் பங்கா

தற்போதைய  உலக வங்கியின் தலைவர்  டேவிட் மல்பாஸ். இவருடைய பதவிக்காலம் முடியும் முன்னரே அந்த பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.  இந்நிலையில் உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த  அஜய் பங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 63.   உலக வங்கியின் தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அஜய் பங்காவை உலக வங்கி நிர்வாக இயக்குனர்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர்.

அஜய் பங்கா
ஜூன் 2ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில்  அடுத்த 5ஆண்டுகள்  அஜய் பங்கா  உலக வங்கியின் தலைவராக பதவி வகிப்பார். தற்போது அவர் அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். அஜய் பங்காவுக்கு  2016ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web