சூப்பர்... கிண்டி சிறுவர் பூங்காவில் வாட்ஸ் அப் மூலம் நுழைவுச் சீட்டு!

 
கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தளங்களில் குழந்தைகளுக்கு பிடித்த இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா. இந்த பூங்காவில் பார்வையாளர்கள் வசதி மற்றும் தேவைகளின் அடிப்படையிலும் மேம்படுத்தலின் அடிப்படையிலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா

அந்த வகையில் தற்போது  வாட்ஸ் அப் வழியே நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, தமிழக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ” கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது எதிர்பார்க்கப்படும் கூட்டத்தை நிர்வகிக்கவும். பார்வையாளர்களுக்கு அதிக வசதியை அளிக்கவும் வாட்ஸ்அப்  டிக்கெட் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி 8667609954 என்ற எண்ணுக்கு ஹாய் "Hi" செய்தியை அனுப்பினால்  பார்வையாளர்கள் தேவையான விவரங்களைப் பதிவேற்றலாம் மற்றும் தங்களின் மொபைல் போன்களில் நேரடியாக தங்கள் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த முயற்சியால்  டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்கும் நேரம் குறைக்கப்படுகிறது.  மற்றும் பார்வையாளர்களின் திருப்திக்காக டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. எனக்  கூறப்பட்டுள்ளது.

இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web