அசுர வேகம்... லாரி மீது அடுத்தடுத்து மோதிய 5 கார்கள்... 3 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்!

 
கார் விபத்து அமெரிக்கா

அமெரிக்காவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்ரு சாலையின் நடுவே அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், நிலைதடுமாறி சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. இதில், லாரியின் பின்னால் சென்று கொண்டிருந்த 5 கார்கள், அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையில் இங்கும் அங்குமாக அலைப்பாய்ந்தபடி ஓடிய லாரி, நிலைதடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது. லாரியைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த 5 கார்கள் அதே வேகமாக அடுத்தடுத்து லாரியின் மீது பயங்கரமாக மோதின. 

Sunnyvale

இந்த சங்கிலித்தொடர் விபத்தில் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கடுக்காக கார்கள் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. 

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், விபத்தில் சிக்கிய வாகனங்களை பல மணி நேரம் போராடி மீட்டெடுத்தனர். 

Sunnyvale

இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையின் வடக்கு மற்றும் தெற்கு பாதைகள் மூடப்பட்டு வாகனங்கள் வேறு வழியாக திருப்பிவிடப்பட்டன. வாகனங்களை மீட்ட பின்னர் அந்த பாதை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் சுமார் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக கலிபோர்னியா மாகாண போக்குவரத்து துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web